“வனத்தின் கணங்கள்” காத்தான்குடியில் புகைப்படக் கண்காட்சி …

0
812

Uwais Mohideen 2(பஹ்த் ஜுனைட்)

தனிப்பட்ட மற்றும் தொழில்சார் இயலுமைகளில் இயற்கை மற்றும் அதன் பாதுகாப்பு என்பவற்றில் தன்னால் முடிந்தளவு பங்களிப்பை வழங்க திட சங்கற்பம் பூண்டுள்ள உவைஸ் முஹைதீன் அதன் ஆரம்ப கட்டமாக தனது கன்னி இயற்கை புகைப்படக் கண்காட்சியை “வனத்தின் கணங்கள்” (“GLIMPSES OF WILD”) என்ற தலைப்பில் ஏப்ரல் 27, 28, 29ம் திகதிகளில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடத்துகின்றார்.

இந்த கண்காட்சியின் பிரதான நோக்கம் தனது சமூகத்தை சூழ காணப்படும் வன விலங்குகளின் மீதான இரசனை மற்றும் அவற்றின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு போன்றவற்றின் மேம்பாடு என்பதாகும். “வனத்தின் கணங்கள்” புகைப்படக் கண்காட்சி இந்த பிரதேசத்தில் இடம்பெறும் இவ்வாறான முதலாவது நிகழ்வு என்பது விஷேட அம்சமாகும்.

FB_IMG_1524320096259குறித்த கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடலாம் என்பதோடு, ஒளிப்படக் கலையில் ஆர்வமும் அறிவும் உள்ளோருக்கான கலந்துரையாடல் நிகழ்வுகள் பிரபல ஒளிப்படவியலாளர்களால் கண்காட்சியின் போது நடத்தப்படவுள்ளன.

உவைஸ் முஹைதீன் கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி நகரில் 1976 ஆம் ஆண்டு பிறந்தார். இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழகத்தில் விவசாய விஞ்ஞான இளமாணி பட்டப்படிப்பை பூர்த்தி செய்த அவர் பேராதனை பலகலைக்கழகத்தில் கணினி விஞ்ஞான முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். தற்போது இலங்கை சுங்கத் திணைக்களத்தில் உதவி சுங்க அத்தியட்சகராக பணி புரிகின்றார். இலங்கை சுங்கத் திணைக்களத்தில் இணையும் முன்னர் பல அரச மற்றும் சர்வதேச நிறுவனங்களில் பணி புரிந்துள்ளார்.

FB_IMG_1524320091042நண்பர்களுடன் இலங்கையின் தேசிய வனவிலங்கு சரணாலயங்களுக்கு மேற்கொண்ட சுற்றுலாக்கள் அவருக்கு இயற்கை மற்றும் வன ஜீவராசிகள் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தின. இலங்கையின் தாவர மற்றும் விலங்கு இனங்கள் தொடர்பான விவரணப் படங்கள் மற்றும் வாசிப்புகள் என்பன இந்த ஆர்வத்தை மேலும் வலுப்படுத்தின. இந்த ஆர்வம், 2012 ஆம் ஆண்டு தனது முதலாவது துறைசார் புகைப்படக் கருவியை கொள்வனவு செய்ய எதுவாக அமைந்தது. அவர் இயற்கை புகைப்படக் கலையை தனது உணர்வு பூர்வமான பொழுது போக்காக ஏற்படுத்தி தனது எல்லைகளை விரிவாக்கினார்.

சமகாலத்தில் தனது புகைப்படங்களை எடுக்க பினவரும் பரிமாணங்களை கொண்ட புகைப்பட கருவித் தொகுதியை பயன்படுத்துகின்றார்.

Uwais MohideenNikon D500; Nikon D7200 DSLR கமெராக்கள் மற்றும் AF-S Nikkor 200-500mm f/5.6E ED VR, AF-S Nikkor 18-140mm f/3.5-5.6G ED VR, and AF-S Nikkor 50mm f/1.8. லென்ஸ் தொகுதிகள்.

இவரது இவ் முயற்சி வெற்றிபெற எமது வாழ்த்துக்கள்..

இது தொடர்பான மேலதிக விபரங்களை:

www.facebook.com/uwais.me எனும் முகநூல் பக்கத்தில் காணலாம்.

LEAVE A REPLY