பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி திறந்து வைப்பு

0
141

(அப்துல்சலாம் யாசீம்)

கிழக்கு பல்கலை கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட 04 மாடிகளைக்கொண்ட மாணவர்கள் விடுதி நேற்று (20) வௌ்ளிக்கிழமை பிற்பகல் 2.00மணியளவில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

உயர் கல்வி மற்றும் பெருஞ்சாலைகள் அமைச்சினால் இருநூற்றி பதினைந்து மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இக்கட்டிடம் முகாமைத்துவம், தொடர்பாடல், சித்த வைத்தியத்துறை மற்றும் கனணி, பிரயோக விஞ்ஞானம் ஆகிய துறைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி 400 மாணவர்கள் தங்குவதற்குறிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக முதல்வர் கலாநிதி வல்லிபுரம் கனகசிங்கம் கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடக செயலாளர் ஹஸன் அலால்தீன் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

DSC_4443

LEAVE A REPLY