ஏறாவூர் உலமா சபையால் “அதான்” சொல்வதற்கான இலவச பயிற்சி நெறி

0
231

(முகம்மட் அஸ்மி)

ஏறாவூரில் உலமா சபையினை புதிய நிருவாகம் பொறுப்பேற்றதன் பிற்பாடு பல்வேறு வினைத்திறன் மிக்க பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஏறாவூரில் உள்ள 44 பள்ளிவாசல்களில் இருந்தும் தொழுகைக்கான அழைப்பான அதான் (பாங்கு) சொல்லும் செயற்பாட்டை நெறிப்படுத்தி அழகாகவும், திருத்தமாகவும் ஒரு ஒழுங்கமைப்புடன் மேற்கொள்வதற்காக பள்ளிவாசல்களின் முஅத்தீன்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்களை உள்ளடக்கி இலவச ஆறு மாதங்களுக்கான பயிற்சி நெறி ஒன்றை ஏறாவூர் உலமா சபை நாளை (21) ஆரம்பிக்க உள்ளது.

முதலாவது பயிற்சி நாளை காலை 10.00 மணிக்கு ஏறாவூர்-1, முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் ஆரம்பம் ஆக உள்ளது.

தேர்ச்சி மிக்கவர்களால் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதுடன் பயிற்சி முடிவில் திறமையை வெளிக்காட்டும் மூன்று பேருக்கு இலவசமாக புனித உம்றா கடமையை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தையும் ஏறாவூர் உலமா சபை வழங்க உள்ளது.

ஆர்வம் உள்ளவர்கள் நாளை காலை 10.00 மணிக்கு முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு சென்று பயனடையலாம்.

ஏறாவூர் உலமா சபையின் ஆக்கபூர்வமான முன்னெடுப்பிற்கு பாராட்டுக்கள்.

LEAVE A REPLY