பேருந்து முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து; 68 வயது பெண் பலி

0
85

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலையிலிருந்து கஐூவத்தைக்கு பயணித்த தனியார் பேருந்து முற்சக்கர வண்டியுடன் இன்று (19) காலை மோதி விபத்துக்குள்ளானதில் முற்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த பெண் கோமரங்கடவெல,கல்கடவெல பகுதியைச்சேர்ந்த கபுறுஹாமிகே சீலாவதி (68வயது) எனவும் தெரிய வருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ்ஸின் பின் பகுதி முற்சக்கர வண்டியுடன் மோதியதில் முற்சக்கர வண்டியின் ஓரமாக இருந்து சென்ற பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாகவும் சாரதி உட்பட இருவரும் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY