சதாம் ஹுசைனின் ஜனாஸா தோண்டியெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வீடியோ உறுதிப்படுத்தப்பட்டதல்ல – ஹிஸ்புல்லாஹ்.

0
300

(எச்.எம்.எம்.பர்ஸான்)

ஈராக் பக்தாத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அந் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனின் ஜனாஸாவை தோண்டி அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக எடுக்கப்பட்ட போது அவரது ஜனாஸா எந்தப் பாதிப்பும் இல்லாதவாறு இருப்பதுபோல் என்னால் அனுப்பப்பட்ட வீடியோ உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்த்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

அரபு நாட்டைச்சேர்ந்த ஒரு சகோதரர் எனக்கு அனுப்பிவைத்த அந்த வீடியோவைத்தான் நானும் அனுப்பி வைத்தேன் அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகா பரவி வருகின்றது அந்த வீடியோ காட்சி பழையது என எனக்கு தகவல் கிடைக்கப்பட்டுள்ளது எனவே என்னால் அனுப்பி வைக்கப்பட்ட வீடியோ தொடர்பில் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY