நீரில் மூழ்கி 60 நாட்களில் 93 உயிரிழப்புகள்

0
181

இந்த வருடத்தின் முதல் 60 நாட்களில் 93 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த வருடத்தில் 728 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், இதில் 150 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 728 பேரில் 100 பேர் 19 வயதுக்கு குறைந்தவர்களென குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த 2016 ஆம் ஆண்டு 877 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், இதில் 177 பேர் பெண்களெனவும், இதில் 105 பேர் 19 வயதுக்கு குறைந்தவர்களென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

(Tamilmirror)

LEAVE A REPLY