கண்டி சம்பவம்; இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள விசாரணைகள்

0
201

அண்மையில் கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பான விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பண்டிகைக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய அடிப்படைவாதிகளுக்கு எதிராக தராதரம் பார்க்காது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

(news.lk)

LEAVE A REPLY