விளையாட்டுக்கள் அதனை ஆடுகின்ற வீரர்களின் தேகாரோக்கியத்திற்கும், ஆரோக்கியமான சமூக அமைப்புக்கும் பெரிதும் பங்காற்றுகின்றன

0
136

றிசாத் ஏ காதர்

“விளையாட்டுக்கள் அதனை ஆடுகின்ற வீரர்களின் தேகாரோக்கியத்திற்கும், ஆரோக்கியமான சமூக அமைப்புக்கும் பெரிதும் பங்காற்றுகின்றன. முரண்பாடுகளால் முட்டி மோதிக் கொள்கின்ற இயக்கங்களும், விரிசல்களை வருந்தி அழைத்து வாழுகின்ற சமூகங்களும் தமக்குள் இணக்கங்களையும், உடன்பாடுகளையும் ஏற்படுத்திக் கொள்ள முடியாத கையறு நிலை பரவலாக உலகெங்கும் காணப்படுகின்றது. என அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்தார்.

அக்கரைப்பற்று “யங்ஸ்டார் யூத்ஸ்” மற்றும் “லோட்ஸ் போய்ஸ்” ஆகிய இரு கழகங்களும் இணைந்து ஒழுங்கு செய்து நடாத்திய கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே ஹனீபா மதனி மேற் கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் இஸ்லாமிய ஆட்சியின் ஆரம்ப கலீபாக்களில் ஒருவராக ஆட்சி செய்த கலீபா உமர் பாறூக் (ரழி) அவர்கள் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான தனது கரிசனையின் காரணமாக அன்றைய பெற்றோர்களை தமது பிள்ளைகளுக்கு நீந்துவதற்கும், ஈட்டி எறிவதற்கும், குதிரை ஓட்டுவதற்கும் கட்டாய பயிற்சி வழங்குமாறு கட்டளையிட்டார்கள்.

ஒன்று சேர்ந்து விளையாடுவதும், தம் குழுவின் இதர சகவீரர்களுடன் ஒன்றித்து இயங்குவதும், தம்குழுவின் தலைமையை கௌரவித்துத் தீர்மானம் மேற்கொள்வதும் அதேவேளை எதிர் தரப்பிலிருந்து விளையாடுபவர்களை சட்ட திட்டங்களை அனுசரித்து முறையாக விளையாடி அவர்களை வெற்றிகொள்ள முயற்சிப்பதும் விளையாட்டின் மூலம் கிடைக்கப் பெறுகின்ற சிறப்பான குணாம்சங்களாகும் இவற்றை வேறு வழிகளில் அடைந்து கொள்வது என்பது முடியாதகாரியாமாகும்.

எனவே மேற்குறித்த குணாம்சங்களே சமூகங்கள் அமைதியாகவும், நிம்மதியுடனும் வாழஅவசியப்படுகின்றன. இதனை மையப்படுத்தியதாகவே 2018ம் ஆண்டிற்கான சர்வதேச ஒலிம்பிக்போட்டிகளின் கருப் பொருளாக “விளையாட்டுக்களின் ஊடாக உல சமாதானம்” என்றுபிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள்எதிர்க்கட்சித்தலைவர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்தார்.

இன்றைய இளைய தலைமுறையினரும் தமது தலைமைகள் எத்தகைய பணிப்புரிகளை தமது ஆரோக்கியம், பாதுகாப்பு சம்பந்தமாக வழங்கப் போகின்றனர் என்பதை இன்று பெரிதும் எதிர்பார்த்துக் கார்த்து நிற்கின்றனர்.

அண்மையில் அக்கரைப்பற்று நகரப்பள்ளி வீதியில் அமைந்துள்ள “யங்ஸ்டார் யூத்ஸ்” கழகத்தின்காரியாலய மண்டபத்தில் அதன் தலைவர் எம்.ஏ.எம். அஸ்மத் சக்கி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலய அதிபர் அல்-ஹாஜ். நயீம்,அக்கரைப்ப ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அல்ஹாஜ். எம்.எம்.எல். அப்துல் லத்தீபுபஹ்ஜி மற்றும் கல்முனை “ஹட்டன் நஷனல் வங்கி” முகாமையாளர் அல்ஹாஜ். ஏ.எல்.எம். சிறாஜ் றஸ்மி அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வுகளைச் சிறப்பித்தனர்.

2591e907-c922-47e9-9bee-16be5ba4f50b

LEAVE A REPLY