பா’ரதத்தில்’ சிக்கிய சிறுமிகள்

0
446

(Mohamed Nizous)

காஷ்மீரின்
காடுகளில்
குஜராத்தின்
குன்றுகளில்
அரங்கேறிய அராஜகம்
உள்ள சிறுமிகளின்
உள்ளதைத் தாக்கியதால்..

இந்திய சனத்தொகையை
எழுது என்றால்
120 ‘கேடிகள்’ என்று
இனி வரும் சிறுமிகள்
எழுதக் கூடும்

இந்திய நாணயம்
என்ன என்று கேட்டால்
இது ‘நாணயம்’ இல்லா
இரக்கமற்ற தேசம் என
இனிப் பதில் வரலாம்

ஆகஸ்ட் 15 பற்றி
அவர்களிடம் கேட்டால்
கொதிக்கும் எண்ணெய்யிலிருந்து
கொழுந்து நெருப்பில்
விழுந்த நாள் என்று
விடை வரலாம்

எதிர் கால இலட்சியம்
என்ன என்று கேட்டால்
உயிர் பிழைத்து வாழ்தல் என
உரைக்கப் படலாம்

காக்கிச் சட்டை போட்டவரைக்
காணும் போதெல்லாம்
ஒரு குதிரை மேய்க்கும் சிறுமியின்
உருவம் முன் வந்து
எச்சரிக்கையாய் இரு என்று
உச்சரிக்கலாம்.

ஈவிரக்கமில்லா
இந்தக் காட்டேரிகளை
எல்லோரும் பார்த்திருக்க
இரண்டாகக் கிழித்து
இந்தக் கொடூரத்தை
இல்லாமல் ஆக்க வேண்டும்.
இல்லையென்றால்,
பா’ரதத்தின்’
சில்லுகளில் சிக்கும்
இன்னும் பல
அப்பாவி சிறுமிகளுக்காய்
அப்பாக்கள்
அழ வேண்டி வரலாம்

LEAVE A REPLY