கிணற்றில் வீழ்ந்து 18 வயது யுவதி தற்கொலை

0
172

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை, கன்னியா பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் இன்று (15) காலை மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கன்னியா,பீலியடி இலக்கaம் 10 இல் வசித்து வரும் காலிமுத்து தர்சிக்கா (18 வயது) என்ற யுவதி எனவும் தெரியவருகின்றது.

குறித்த யுவதி உளநலம் பாதிக்கப்பட்டவரெனவும், கிணற்றில் பாய்ந்து உயிரிழந்ததாகவும் பொலிஸாரிடம் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஆனாலும் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளதுடன் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்கவுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY