2020 ஆம் ஆண்டளவில் அனைத்து மக்களுக்கும் ஈ-ஹெல்த் அட்டை

0
353

2020 ஆம் ஆண்டளவில் அனைத்து நாட்டு மக்களுக்கும் ஈ-ஹெல்த் அட்டை வழங்கப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அனைத்து நபர்களினதும் சுகாதார அறிக்கை இதில் உள்ளடக்கப்படும். ஒருவரின் இரத்த வகை உள்ளிட்டவை இதில் குறிப்பிடப்படும். இதனால் சிகிச்சையின் போது துரிதமாக சிகிச்சையை மேற்கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈ-ஹெல்த் அட்டை உலக சுகாதார தினத்தன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதுதொடர்பான நிகழ்வு கடந்த ஏழாம் திகதி கொழும்பு நெலும்பொக்கன என்ற தாமரை தடாக கலையரங்களில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

(Adaderana)

LEAVE A REPLY