ஆஷிபா

0
534

(Mohamed Nizous)

அன்புணர்வு இல்லாத
ஆர் எஸ் எஸ் அயோக்கியன்கள்
வன்புணர்வு செய்து
வளர்கின்ற பூவின்
வாழ்க்கையை முடித்து விட்டான்கள்

தாய்க்குப் பிறக்காது
நாய்க்குப் பிறந்தவன்களால்தான்
இப்படி ஒரு அராஜகத்தை
இரக்கமின்றி செய்ய முடியும்

பட்டாம் பூச்சி பிடிக்கும்
பாலர் வயதுப் பிள்ளையை
எட்டு நாளாய் வன்புணர்ந்த
இரக்கமில்லா காட்டேரிகளை
சுட்டுத் தள்ள வேண்டிய காக்கியே
சுவை பார்த்தான் என்பது
கெட்டுப் போன ஆட்சியின்
கேவலமான பக்க விளைவு

அவளின் அலறல்
அவளின் கதறல்
அத்தனையும் ஒரு நாள்
ஆர் எஸ் எஸ் அயோக்கியன்களை
அத்திவாரத்தை அசைக்கும்
அந்த அதிர்வில்
இந்த
மோடியின் ஆட்சியும்
மூலையில் போய் விழும்

இறைவா
அவளை
சுவர்க்கத்தில் பறக்க விடு
இவன்களை
இழிவாக்கி இறக்க விடு

LEAVE A REPLY