வெலிகந்தை விபத்தில் இருவர் உயிர் இழப்பு

0
235

(வாழைச்சேனை நிருபர்)

வெலிகந்தை பகுதியில் நேற்று (13) வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளதாக வெலிக்கந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவத்தில் செம்மண்ணோடையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான எஸ்.ஜுனைதீன் (வயது 46) மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறியரக வாகனத்தில் இருந்த வத்தளையைச் சேர்ந்த ஆறுமுகம் கருப்பை என்பவரும் மரணமடைந்துள்ளனர்.

வெலிக்கந்தை பகுதியில் யானை வீதியை விட்டு ஊடறுப்பதைக் கண்டதும் கொழும்பு வத்தளையில் இருந்து குடாப்பொக்கனை பிரதேசத்திற்கு செல்லவிருந்த சிறியரக வாகனத்தில் பயணித்தவர்கள் யானை செல்லும் வரை வாகனத்தை நிறுத்தி இருந்தாகவும், ஓட்டமாவடியை நோக்கி வந்த லொறி நிறுத்தியிருந்த வாகனத்தில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்த ஆறு பேர் காயங்களுடன் வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், இச்சம்பவம் தொடர்பாக வெலிக்கந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

30656268_2040202339572102_7491828161559134208_n 30656671_2040202219572114_1016143533716799488_n 30697589_2040202282905441_8798660798470684672_n 30697654_2040202672905402_7856750577554817024_n

LEAVE A REPLY