பட்டதாரிகள் குழப்பமடையத் தேவையில்லை; இதுவரை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்யலாம் – அனைவருக்கும் நேர்முகத் தேர்வு

0
99

(பாறுக் சிஹான்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக 463 பட்டதாரிகள் பதிவு செய்துள்ளனர். இதுவரை பதிவு செய்யாத பட்டதாரிகள் வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தமது விவரங்களை யாழ். மாவட்ட செயலகத்தில் பதிவு செய்ய முடியும். புதிதாகப் பதிவு செய்வோருக்கான நேர்முகத் தேர்வு வரும் 20ஆம் திகதிக்குப் பின்னர் இடம்பெறும்” இவ்வாறு யாழ். மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் பட்டதாரிகள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அல்லது தேசிய கொள்கைகள் அமைச்சிலோ தமது விவரங்களைப் பதிவு செய்த பட்டதாரிகள் மீளவும் பதிவு செய்யத் தேவையில்லை.

பதிவு செய்த 3 ஆயிரத்து 4 பட்டதாரிகளுக்கு நேர்முகத் தேர்வுக்கான கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 18ஆம் திகதி தொடக்கம் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெறும்.

நேர்முகத் தேர்வுக்கான கடிதங்கள் கிடைக்காதவர்களும் இதுவரை தமது பதிவுகளை மேற்கொள்ளாதவர்களும் தமது பதிவுகளை வரும் 20ஆம் திகதிக்கு முன் யாழ். மாவட்ட செயலகத்தில் பதிவு செய்து தமது கடிதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

புதியவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் வரும் 20ஆம் திகதிக்குப் பின்னர் நடைபெறும்.

எனவே இந்த விடயத்தில் எந்தவொரு பட்டதாரியும் குழப்பமடையத் தேவையில்லை – என்றார்.

LEAVE A REPLY