கல்குடா – அகில இலங்கை ரீதியாக சிறுகதைப் போட்டி

0
217

(வாழைச்சேனை நிருபர்)

சமூக ஊடக நண்பர்கள் வட்டம் அகில இலங்கை ரீதியாக சிறுகதைப் போட்டிகளை நடாத்தவுள்ளனர்.

அந்த வகையில் போட்டி நிபந்தனைகளாக

01. கண்டி மாவட்டத்தில் அண்மையில் நடந்த கலவரங்களைப் பின்னணியாகக் கொண்டு மாத்திரம் கதைகள் எழுதப்பட வேண்டும்.

02. இலங்கையரான எந்த இனத்தைச் சார்ந்தவரும் போட்டியில் பங்குபற்ற முடியும்.

03. கதைகள் தமிழ் மொழியில் எழுதப்பட்டதாக இருப்பதுடன், இதற்கு முன் எந்தப் போட்டிக்கும் அனுப்பப்படாததாகவும், எதிலும் பிரசுரமானதாகவும் இருக்கக் கூடாது.

04. ஒருவர் ஒரு கதை மாத்திரமே அனுப்புதல் வேண்டும்.

05. ஏ4 தாளில் ஐந்து பக்கங்களுக்கு மேற்படாமல் 12 புள்ளி எழுத்தில் கணினித் தட்டச்சு செய்யப்பட்டுக் கதைகள் அனுப்பப்பட வேண்டும்.

06. கதையை எழுதியவர் தானே எழுதியது என்பதை உறுதிப்படுத்தும் கடிதம் ஒன்றைக் கதையுடன் இணைத்து அதில் பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம், தொடர்பிலக்கம் ஆகியவற்றைக் குறிப்பிடல் வேண்டும். எக்காரணம் கொண்டும் கதை இடம்பெற்றுள்ள தாளில் எந்தவொரு இடத்திலும் பெயர், விபரங்கள் குறிப்பிடப்படலாகாது.

07. கதைகளைப் பதிவுத் தபாலில் அல்லது வேகத் தபாலிலோ அனுப்புவது பாதுகாப்பானது.

08. விதிகளைப் பின்பற்றாத கதைகள் நிராகரிக்கப்படும்.

09. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. தெரிவு பெறும் கதைகளும் நடுவர்களால் பரிந்துரைக்கப்படும் கதைகளும் அமைப்பின் வெளியீடு ஒன்றில் பிரசுரமாகும் உரிமை கொண்டிருக்கும்.

10. கதைகள் யாவும் எதிர்வரும் 31.05.2018 அன்றோ அதற்கு முன்னரோ கிடைக்கக் கூடியதாக பின்வரும் முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும்.

11. Ashroff Shihabdeen, 37, Dhankanatha Road, Mabola, Wattala.

வெற்றி பெறுபவர்களுக்கு முதற் பரிசாக ரூபாய் பத்தாயிரமும் (10,000), இரண்டாம் பரிசாக ரூபாய் ஏழாயிரத்து ஐநூறும் (7500), மூன்றாம் பரிசாக ரூபாய் ஐயாயிரமும் (5000) சான்றிதழ்களும் வழங்கப்படும்.

பரிசுக்குத் தகுதி பெறாத, ஆனால் நடுவர்களால் விதந்துரைக்கப்படும் பட்சத்தில் மேலும் ஐந்து சிறுகதைகளுக்கு தலா ரூபாய் ஆயிரமும் (1000) சான்றிதழ்களும் வழங்கப்படும் என சமூக ஊடக நண்பர்கள் வட்ட தலைவர் ஏ.சிஹாப்தீன் தெரிவித்தார்.

LEAVE A REPLY