ஏறாவூர் நகர சபை உறுப்பினரின் முன்மாதிரி; குவியும் பாராட்டுக்கள்

0
235

WhatsApp Image 2018-04-12 at 18.41.25 (முகம்மட் அஸ்மி)

ஏறாவூர் நகர சபையின் முதலாவது அமர்வு இன்று (12) வியாழக்கிழமை தவிசாளர் இரம்ழான் அப்துல் பாஸித் தலைமையில் நகர சபை சபா மண்டபத்தில் ஆரம்பமானது, இதன்போது சபைக்கு தெரிவான 17 உறுப்பினர்களும் பிரசன்னமாகி இருந்தனர்.

பல்வேறு விடயங்களை முன்னிலைப்படுத்தி உறுப்பினர்கள் இடையே கருத்தாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில், அவர்களின் மாதாந்த கொடுப்பணவும் நகரசபை உத்தியோகத்தரால் விநியோகம் செய்யப்பட்டது.

அதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா வின் அணி சார்பில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பிரதான வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினரும் சாலி ஹாஜியார் பவுண்டேசன் தலைவருமான முஹம்மட் சாலி நழீம் தனக்கான கொடுப்பணவை பெற்றுக் கொண்ட அடுத்த கணமே, ஏறாவூர் மீராகேணி சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உடனடியாக ஏறாவூர் நகரசபைக்கு வரவழைத்ததுடன், சபா மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையிலே வெளியேறிச் சென்று அவர்களிடம் குறித்த தொகையை அண்பளிப்பு செய்து விட்டு மீண்டும் மாதாந்த கூட்டத் தொடரில் பங்கேற்றார்.

நகர சபை உறுப்பினரின் குறித்த முன்மாதிரியான செயற்பாட்டிற்கு பல்வேறு தரப்புக்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சார காலத்தில், தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அந்த உறுப்புரிமை ஊடாக தனக்கு கிடைக்கும் கொடுப்பணவுகளை பொது விடயங்களுக்கே பயன்படுத்துவேன் என கூறிய உறுதி மொழியை -கொடுப்பணவு கிடைத்த அடுத்த கணமே, கூட்டம் முடியும் வரை காத்து நிற்காது துரிதமாக செயற்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றிய நகர சபை உறுப்பினர் நழீம் இன் செயற்பாடு பலரது கவனத்ததையும் ஈர்த்து பாராட்டையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2018-04-12 at 18.41.26

LEAVE A REPLY