முஜீபுர் றஹ்மான், பத்தேகம சமித தேரர் பலஸ்தீன் செல்ல இஸ்ரேல் மறுப்பு!

0
107

இலங்கையிலிருந்து பலஸ்தீன் நாட்டுக்கு நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்காக அமைச்சர் ஹலீம், பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்தேகம சமித தேரர் உட்பட பலர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இறுதி நேரத்தில் பலஸ்தீனத்திற்கான இந்த பயணத்திற்கு முஜீபுர் றஹ்மானுக்கும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்தேகம சமித தேரருக்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணத்திற்கான வீசா அனுமதியை வழங்க இஸ்ரேலிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மேற்படி தூதக்குழுவின் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக பலஸ்தீன் மக்களின் தாயக பூமியின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து, ஸியோனிஸ சக்திகளால் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் என்ற சட்டவிரோத அரசு உருவாக்கப்பட்டது.

பலஸ்தீனத்திற்கான சகல அதிகாரங்களையும் தன் கைவசமே வைத்துக் கொண்டு அந்த மக்களின் அடிப்படை உரிமைகளை இஸ்ரேலிய அரசு நசுக்கி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY