பியர் போத்தல்களை கொண்டு சென்ற இரண்டு பேர் கைது!

0
116

(அப்துல்சலாம் யாசீம்)

அனுமதிப் பத்திரமின்றி அதிகளவான பியர் போத்தல்களை கொண்டு சென்ற இரண்டு பேரை திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து நேற்று (11) மாலை திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கடமைபொறுப்பதிகாரி புத்திவர்தன தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, வரோதயநகர், கந்தையா வீதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவரும் குச்சவௌி, நாவற்சோலை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை அனுராதபுர சந்தியிலுள்ள சாராயக்கடையிலிருந்து அளவுக்கு அதிகமான பியர் போத்தல்களை வாங்கிக்கொண்டு சென்று அதிகளாவன விலைக்கு அனுமதிப்பத்திரமின்றி விற்பனை செய்து வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து வழங்கப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது சாராயக்கடையிலிருந்து வாங்கிக்கொண்டு செல்லும் போது அபயபுர மற்றும் அனுராதபுர சந்தி போன்ற இடங்களில் வைத்து இவர்களை கைது செய்ததாகவும் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

012

LEAVE A REPLY