அல்ஜீரியா விமான விபத்து; 247 பேர் வரை பலி

0
260

636590655733045064.விபத்துக்குள்ளான அல்ஜீரிய இராணுவ விமானத்தில் பயணித்த, குறைந்தது 247 பேர் மரணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதில், மேற்கு சஹாராவை மொரோக்கோவிலிருந்து விடுதலை செய்யுமாறு கோரும், அல்ஜீரிய ஆதரவு பொலிசாரியோ முன்னணி எனும் போராட்ட இயக்கத்தைச் சேர்ந்த 26 பேர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்ஜீரிய தலைநகர் அல்ஜியர்ஸிலுள்ள (Algiers) இராணுவத்தளமான பௌபரிக் (Boufarik) இலிருந்து புறப்பட்ட குறித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் இது வரை எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பையும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY