குடிநீர் வசதி இல்லாத மக்களுக்கு அதை ஏற்படுத்திக் கொடுப்பது மிகப் பெரிய நன்மையாகும்: தவிசாளர் அஸ்பர்

0
234

(விஷேட நிருபர்)

குடிநீர் வசதி இல்லாத மக்களுக்கு குடி நீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது மிகப் பெரிய நன்மையாகும் என காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார். தவிசாளரின் ஏற்பாட்டி

காத்தான்குடி நகர சபை மண்டபத்தில் வைத்து நேற்று முன்தினம் (09) திங்கட்கிழமை மாலை 25 பயணாளிகளுக்கு குடி நீர் இணைப்புக்கான காசோலையை கைளிக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் சுத்தமான குடி நீரை பருக வேண்டும். இன்று நீரினால் பல நோய்கள் ஏற்படுகின்றன.

சிறு நீரகத்தில் ஏற்படும் பல விதமான நோய்களுக்கு நீர் காரணமாக அமைகின்றது. இதனால் சுத்தமான குடி நீரைப் பருக வேண்டும்.

குடி நீர் இணைப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது நாம் செய்யும் மிகப் பெரிய நன்மையாகும். இன்று பலரும் குடி நீர் வசதியின்றி காணப்படுகின்றனர். எங்களால் முடிந்தளவு குடி நீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றோம் என்றார்.

இந்த வைபவத்தில் சமூக செயற்பாட்டாளர் மும்மட் தஸ்னீம், நகர சபை உத்தியோகத்தர் ஏ.எல்.பஸ்மி தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் காத்தான்குடி அலுவலக உத்தியோகத்தர் முகம்மட் அஸ்மி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

DSC07846

LEAVE A REPLY