ஊடகவியலாளர் முசாரஃபிற்கு ஆதரவாக குரல் கொடுப்பது பகுத்தறிவுடன் சிந்திக்கும் எல்லோருடைய தார்மீக கடமையாகும்

0
256

வசந்தம் தொலைக்காட்சி ஊடகவியலாளர் முஷர்ரப் கூறியது பெரிதாக ஒன்றுமில்லை.

தமிழ்த் தரப்பினர் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்காக 12 கோரிக்கைகளை முன்வைத்து பிரதமரோடு உடன்படிக்கை செய்திருக்கிறார்கள். அது பத்திரிகையிலும் வந்தது. காங்கிறஸ் முஸ்லிம் மக்களுக்காகச் செய்த உடன்படிக்கை என்ன என்பதை அவர்கள் வெளியிடவில்லை. பாராளுமன்றத்தில் விமல் வீரவன்ஸ நாக்கைப் புடுங்கிக்கொள்ளுமளவிற்குக் கேள்வி கேட்கும் போது சாந்த சொரூபியாக இருக்கிறார் SLMC யின் தலைவர்.

அதே போன்று உதய கம்மன்பில, வாசுதேவ நானயக்கார குறித்த கேள்விகளை தொடுக்கின்றார்கள். அமைச்சரின் மகனொருவன் தலைக்கு எத்தனை கோடி வாங்கினார் தலைவர் என்று முகப்புத்தகத்தில் கணக்குக் காட்டுகிறார். இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் மக்களுக்கு சந்தேகம் வருகிறது. கட்சி அதனைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று முஷாரஃப் சொன்னதுதான் குற்றம். தெளிவுபடுத்துவதற்கு ஒன்றுமில்லாததால் தெளிவு படுத்தச் சொன்னவனைத் துரத்தப் பார்க்கின்றார்கள். முஷர்ரப் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?

எனது பார்வையில் தவறும் இருக்கின்றது. குறித்த பிரேரணைக்கு முஸ்லிம்களை பிரதி நிதித்துவப்படுத்தும் பிரதான இரண்டு கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் எதிராக வாக்களித்திருந்த நிலையில் முஷாரஃப் ஏன் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிடம் மட்டும் இந்த கேள்வியினை கேட்க வேண்டும்.? ACMC யை பார்த்தும் கேட்டிருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

ஆனால் முஷாரஃப் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் முஷார்ஃபை இடை நிறுத்த காங்கிரஸ் கட்சியின் தலைமை எடுத்த பிராயத்தனமானது ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாகவே நான் பார்க்கின்றேன். அதற்காக ஊடகவியலாளர்கள் மட்டுமல்லாமல் பகுத்தரிவுடன் சிந்திக்கும் சகல மனிதர்களும் ஊடகவியலாளர் முஷாரஃபிற்கு ஆதரவாக குரல் கொடுப்பது அவர்களுடைய தார்மீக பொறுப்பாகும்.

(அஹமட் இர்ஷாட், ஓட்டமாவடி)

LEAVE A REPLY