தேர்தலில் தோற்று பட்டியலில் வந்தவர் கிண்ணியா நகர சபையின் தவிசாளராக தெரிவு

0
441

(ஹஸ்பர் ஏ. ஹலீம்)

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட எஸ்.எச்.எம்.நளீம் இன்று (11) கிண்ணியா நகர சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்த இருவருக்கு, பட்டியல் ஆசனங்கள் இரண்டு வழங்கப்பட்ட நிலையில், அதில் ஒருவரான எஸ்.எச்.எம்.நளீம் பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

விசேடமாக இச் சபையில் தேர்தல் சட்டத்தின் படி 25 வீதம் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்ட போதிலும் பெண் பிரதிநிதிகள் எவரும் இல்லாத சபையாக இச் சபை இயங்க இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY