காத்தான்குடி நகர சபைக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி நிதித்துவம் நான்கு பேருக்கு சுழற்சிமுறையில் பகிர்ந்தளிக்க ஒப்பந்தம்

0
188

(விஷேட நிருபர்)

காத்தான்குடி நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி நிதித்துவம் நான்கு பேருக்கு சுழற்சி முறையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

இதற்கான ஒப்பந்தம் நேற்று முன்தினம் (09) திங்கட்கிழமை இரவு கைச்சாத்திடப்பட்டது.

கடந்த காத்தான்குடி நகர சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு ஒரு ஆசனம் கிடைக்கப் பெற்றது.

அதில் போட்டியிட்ட வேட்பாளர்களான ஏ.எம்.மாஹீர் என்பவர் முதல் வருடத்திலும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் கவிஞருமான ரீ.எல்.ஜௌபர்கான் இரண்டாம் வருடத்திலும் முகைதீன் சாலி மூன்றாம் வருடத்திலும் முகம்மட் சப்ரி நான்காம் வருடத்திலும் சுழற்சி முறையில் உறுப்பினர்களாக காத்தான்குடி நகர சபைக்கு தெரிவு செய்யப்படுவார்கள்.

இந்த வகையில் தற்போது முதல் வருடத்தில் ஏ.எம்.மஹீர் என்பவர் காத்தான்குடி நகர சபைக்கு உறுப்பினராக அக்கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான ஒப்பந்தத்தில் பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி முன்னிலையில் இதன் வேட்பாளர்கள் கையொப்பமிட்டனர்.

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சட்டத்தரணி முகம்மட் றூபி உட்பட அதன் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY