அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் ஆப்தினால் ஊடகவியலாளர் அறூஸ் சாரமாரியாக தாக்கப்பட்டார்

0
728

(உண்னமயாளன்)

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு தவிசாளர் அமானுல்லா தலைமையில் நேற்று (10) நடைபெற்றது.

இதன் போது சபையின் இரண்டாவது அமர்வின் நிகழ்ச்சி நிரலில், பல்வேறு குறைபாடுகள் காணப்படுகிறது.

குறிப்பாக, 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தினை அமுல்படுத்தல், துணை விதிகள் சட்டம் மற்றும் நிதி, நிருவாக விதிகள் என்பவற்றை சபை அங்கீகாரத்திற்கு சமர்ப்பித்தல், அதிகாரங்களை கையளிக்கின்ற விடயங்கள், நடப்பு வருட பாதீட்டினை அங்கீகரித்தல் என முக்கிய விடயங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை என்ற காரணத்தினால் சபை ஒத்திவைக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியமையால் ஊடகவியலாளர் அறூஸ் மீது உறுப்பினர் ஆப்தின் சாரமாரியாக தாக்கியதால், தற்போது அவர் அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளரை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் அமானுல்லா மற்றும் பிரதி தவிசாளர் எம்.எஸ்.எம்.ஜஃபர், முன்னாள் தவிசாளர் அன்ஸில் ஆகியோர் பார்வையிட்டனர்.

LEAVE A REPLY