சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு

0
207

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

கடந்த கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியிலிருந்து பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் இன்று (11) புதன்கிழமை இடம்பெற்றது.

மேற்படி கல்லூரியில் 5 மாணவர்கள் 9ஏ சித்திகளையும் 7 மாணவர்கள் 8ஏ சித்திகளையும் பெற்று அப்பாடசாலைக்கு சிறந்த அடைவு மட்ட அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

பாடசாலை அதிபர் எஸ்.ஏ. நஜீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலய பதில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.ஏ. ஜுனைட் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நலன் விரும்பிகள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

(படங்கள் ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

DSC04616 DSC04618 DSC04633 DSC04637

LEAVE A REPLY