(விஷேட நிருபர்)
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பைத்துஸ் ஸக்காத் அமைப்பினால் இந்த வருட ஸக்காத் நிதி, பயணாளிகளுக்கு வழங்குவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (06) இரவு பள்ளிவாயல் நம்பிக்கையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பைத்துஸ் ஸக்காத் அமைப்பினால் இந்த ஸக்காத் நிதி சேகரிக்கப்பட்டது.
இந்த ஸக்காத் நிதி 520 பயணாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
இதில் வீடு திருத்தத்திற்காக 153 பயணாளிகளுக்கு 16 மில்லியன் 473000 ரூபாவும், சுய தொழில் உதவியாக 160 பயணாளிகளுக்கு 5,759500 ரூபாவும், வாழ்வதார உதவியாக 38 பயணாளிகளுக்கு 189,6000 ரூபாவும், மல சல கூட திருத்தத்திற்காக 43 பயணாளிகளுக்கு 114,0000 ரூபாவும், 60 பயணாளிகளுக்கு முழுமையாக மல சல கூடம் அமைப்பதற்காக 360,0000 ரூபாவும், கடன் நிவாரணமாக 66 பயணாளிகளுக்கு 196,0000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளன.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.தௌபீக் தலைமையில் நடைபெற்ற இதனை பள்ளி வாயல்களுக்கு பகிர்ந்தளிக்கும் வைபவத்தில் பைத்துஸ் ஸக்காத் அமைப்பின் தலைவர் மௌலவி எம்.ஐ.எம்.கபூர் மதனீ, செயலாளர்களான சட்டத்தரணி எம்.ஐ.உவைஸ், டி.எம்.அன்சார் நழீமி உட்பட அதன் முக்கியஸ்தர்கள் நிர்வாகிகள் பிரமுகர்கள் பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.