காத்தான்குடி பிரதான வீதியில் நடைபாதையில் வியாபாரத்திற்காக வைக்கப்பட்ட பொருட்களை முன் அறிவித்தல் இன்றி நகரசபையால் பறிமுதல் செய்யப்படும்: நகர முதல்வர்

0
310

(பஹ்த் ஜுனைட்)

காத்தான்குடி பிரதான வீதியில் கடைகளுக்கு வெளியே உள்ள நடைபாதைகள் மீது வியாபார பொருட்களை வைத்திருப்பது சட்டவிரோதமான செயலாம் இவ்வாறாக பொருட்களை வைத்து பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வியாபாரிகளினது பொருட்களை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் காத்தான்குடி நகர சபையினால் பறிமுதல் செய்யப்படும்.

அதே போல் காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் நிரந்தமாக கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதற்கும் அனுமதியில்லை என இன்று இரவு காத்தான்குடி நகர சபையின் முதல்வர் S.H.M.அஸ்பர் (JP) அவர்களின் முகநூலில் இடம்பெற்ற நேரடி நிகழ்வில் இது தொடர்பாக கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே இவ்வாறு தெறிவித்தார்.

இதே போன்று காத்தான்குடியின் அபிவிருத்திகள், ஒழுங்குகள், நகர சபையின் திட்டங்கள் தொடர்பாக கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு முதல்வர் சிறப்பாக பதில் வழங்கினார்.

தற்பொழுது காத்தான்குடி நகரசபையின் முதல்வர் பதவியை பொறுப்பெடுத்துள்ள S.H.M.அஸ்பர் அவர்களே கடந்த நகர சபை ஆட்சிகாலத்திலும் நகர சபை முதல்வராக கடமையாற்றியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY