பிரதியமைச்சர் அமீரலியின் பொதுக்கூட்டம் இரத்து; வியாழக்கிழமை நடைபெறும்

0
129

(வாழைச்சேனை நிருபர்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ‘சத்தியம் வென்றதா? சங்கதி சொல்கிறோம்’ எனும் தலைப்பில் ஓட்டமாவடியில் பொதுக்கூட்டம் நாளை (10) செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த நிலையில் கொழும்பில் கட்சியின் அவசர கூட்டம் உள்ளதால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் ஓட்டமாவடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 9.00 மணிக்கும், கோறளைப்பற்று மத்தி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 11.00 மணிக்கும் நாளை நடைபெறவிருந்த நிலையில் எதிர்வரும் 12.04.2018 வியாழக்கிழமை குறித்த நேரத்தில் நடைபெறும் என்று பிரதி அமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY