ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கொள்ளை: ஒரே நாளிட்குள் கொள்ளையனை பிடித்து நகையும் மீட்பு

0
417

(முகம்மட் அஸ்மி)

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, ஏறாவூர்-04, பெரிய தம்பிரான் கோவில் வீதியில் வீடு ஒன்றினுள் உறங்கிக் கொண்டிருந்த 21 வயது குடும்பப் பெண் ஒருவரிடம் இருந்து தங்க மாலை ஒன்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்த ஏறாவூர் பொலிஸார், சந்தேக நபாரினால் உறவினர் ஒருவரின் கூரைக்கு மேலே மறைத்து வைக்கப்பட்ட தங்க மாலையினையும் மீட்டுள்ளனர்.

இன்று (09) அதிகாலை 1.00 மணியளவில் வீட்டின் பின் பக்க கதவின் மூலமாக உள்ளே நுழைந்த திருடன், தான் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் எடை உள்ள தங்க மாலையை கொள்ளையிட்டு சென்றதாக பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து துரிதமாக விசாரணைகளை முன்னெடுத்த ஏறாவூர் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர் சந்தேக நபரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட நகையினையும் மீட்டுள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் இன் வழிகாட்டலில், குற்ற தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் நிரோஷான் மற்றும் சார்ஜன்ட் பதுர்தீன், பொலிஸ் உத்தியோத்தர்களான மிஸ்பாஹ், விக்கினேஷ்வரன் ஆகியோர் அடங்கலான குழுவினரின் துரித செயற்பாட்டினாலேயே ஒரே நாளில் சந்தேக நபரை கைது செய்ய முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கான ஏற்பாடுகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY