பரீட்சைக்கான அனுமதி அட்டையை மாணவன் கேட்டு வரவில்லை; மாணவனின் தாய் பொய் கூறுகின்றார்: பாடசாலையின் பிரதி அதிபர் தெரிவிப்பு

1
783

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சை எழுதுவதற்கு காத்தான்குடியிலுள்ள பிரபலாமான ஆண்கள் யொன்று அங்கு கல்வி கற்ற மாணவர் ஒருவருக்கு பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்காதது குறித்த பதிவொன்றை நான்  நேற்று (07) சனிக்கிழமையன்று பதிவிட்டிருந்தேன்.

இந்த விடயம் தொடர்பில் குறித்த பாடசாலையின் பிரதி அதிபருடன் இன்று (08) ஞாயிற்றுக்கிழமை தொடர்பு கொண்டு கேட்ட போது கடந்த 22.11.2017ம் திகதி தொடக்கம் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை விநியோகித்தோம்.

இந்த மாணவனின் கடந்த ஆண்டு பாடசாலைக்கான வருகை மிக மோசமாகும். கடந்த 2017ம் ஆண்டில் 67 நாட்களே பாடசாலைக்கு சமூமளித்திருந்தார். அதே போன்று கடந்த ஆண்டு பாடசாலை தவணைப்பரீட்சைக்கும் சமூகமளிக்கவில்லை.

இம் மாணவன் பாடசாலைக்கு வருகை தராமல் குறித்த மாணவனின் தாய் வந்து பரீட்சைக்கான அனுமதி அட்டையை கோரியுள்ளார்.

மாணவனிடம் கொடுக்க வேண்டிய பரீட்சைக்கான அனுமதி மாணவனின் தாயிடம் கொடுக்க முடியாது. ஏனெனில் மாணவன் பெற்றுக் கொண்டேன் என கையொப்பம் இட வேண்டும்.

இந்த மாணவன் வந்து பரீட்சைக்கான அனுமதி அட்டை கேட்கவில்லை. அந்த மாணவன் கூறும் விடயமும் தாய் கூறும் விடயமும் பொய்யாகும். எந்தவொரு மாணவனுக்கும் அனுமதி அட்டை வந்தால் அதை நாங்கள் கொடுக்கத் தவறுதவில்லை. ஆனால் இந்த மாணவன் பாடசாலைக்கு வந்து அனுமதி அட்டையை கேட்க வில்லை.

பரீட்சை தினத்தின் முதல் நாள் கூட ஒரு மாணவனுக்கு அதிபர் அனுமதி அட்டை வழங்கிய சந்தர்ப்பமும் உண்டு.

கடந்த ஆண்டின் பாடசாலை இறுதி தினத்தன்று இம் மாணவன் பாடசாலைக்கு பாடசாலை சீருடையும் பெற்றுச் சென்றுள்ளான். ஆனால் இவர் அனுமதி அட்டையை பெற்றுக் கொள்ள வரவில்லை என தெரிவித்தார்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஊடகவியலாளர்
காத்தான்குடி

தொடர்புடைய செய்தி:
இடியப்பம் அவித்து 11 வருடங்கள் படிப்பித்த எனது மகனுக்கு O/L எழுத பாடசாலை அனுமதி அட்டை வழங்க வில்லை; அநியாயம் செய்து விட்டனர்: அழுது புலம்பும் ஒரு தாய்

1 COMMENT

  1. வரவு குறைவு என்பதால் பரீட்ச்சையில் சரியான பெறுபேறு எடுக்க மாட்டான் என்று நீங்கள் வழங்காமல் விட்டுருக்கலாம் இல்லையா? அதே நேரம் பாடசாலையின் தரத்தை ஒரு நிலையான மட்டத்தில் பேணவேண்டும் என்பதற்காகவும் செய்திருக்கலாம் இல்லையா?

LEAVE A REPLY