‘சத்தியம் வென்றதா? சங்கதி சொல்கிறோம்’ ஓட்டமாவடியில் மாபெரும் பொதுக்கூட்டம்

0
150

(வாழைச்சேனை நிருபர்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஓட்டமாவடி பிரதேச சபையை கைப்பற்றியது தொடர்பாக ‘சத்தியம் வென்றதா? சங்கதி சொல்கிறோம்’ எனும் தலைப்பிலான பொதுக்கூட்டம் நாளை மறுதினம் (10) செவ்வாய்க்கிழமை ஓட்டமாவடி எம்.பி.சி.எஸ். வளாகத்தில் இஷா தொழுகையைத் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டு விஷேட உரையாற்றவுள்ளதுடன் அதில் பல சங்கதிகளை சொல்லவுள்ளார்.

எனவே பொதுமக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கமாறு பிரதி அமைச்சரின் ஊடக பிரிவு அன்புடன் அழைக்கின்றது.

LEAVE A REPLY