ரொட்டவெவ கிராமத்தில் வீடு இல்லாத 15 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

0
195

(அப்துல்சலாம் யாசீம்)

ரொட்டவெவ கிராமத்தில் வீடு இல்லாத 15 குடும்பங்களுக்கு புதிய வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று (08) ஐக்கிய தேசிய கட்சியின் சேறுவில தொகுதி அமைப்பாளர் டொக்டர் அருண சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

வீடு இல்லாமல் வாழும் குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கி “எங்களைப்போல் அவர்களும் வாழ வேண்டும்” எனும் நோக்கில் பல திட்டங்களையும் பல செயற்பாடுகளையும் மொறவெவ பிரதேச சபை உறுப்பினர் வை.டி.ஐெனிர்தீன் முன்னெடுத்து வருகின்றார்.

இதேவேளை உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் வீடில்லாத குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தினை இன்றைய தினம் ஆரம்பித்து வைத்தார்.

மொறவெவ பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ள வை.டி.ஐெனிர்தீனுக்கு கிராம மக்கள் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

இந்நிகழ்வில் ரொட்டவெவ மஸ்ஐிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளி வாசல் பேஷ் இமாம் எம்.நஸார்தீன், திருகோணமலை மாவட்ட வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

FB_IMG_1523169431398

LEAVE A REPLY