கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் பாகிஸ்தான் நாட்டுக்கு விஜயம்

0
107

(ஹஸ்பர் ஏ. ஹலீம்)

கிண்ணியா நகர சபையின் செயலாளரான இலங்கை நிருவாக சேவையை சேர்ந்த என்.எம்.நௌபீஸ் நாளை மறுதினம் (10) செவ்வாய்க் கிழமை பாகிஸ்தான் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

தென்னாசிய பொதுச் சுகாதாரம் தொடர்பான மாநாட்டில் பங்கு கொள்வதற்காக இம்மாதம் ஏப்ரல் 10 தொடக்கம் 15 ஆம் திகதி வரை நடைபெற இருக்கும் மகாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளவுள்ளார்.

இதில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு நகர அபிவிருத்தி திட்டமிடல் அமைச்சர் றவூப் ஹக்கீம் தலைமையிலான உயர்மட்டக் குழுவினரும் இவ் விஜயத்தில் பங்கேற்க உள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் நாட்டின் வானிலை மாற்றம் அமைச்சு மற்றும் இலங்கை நாட்டின் நகர திட்டமிடல் தேசிய நீர்வழங்கல் அமைச்சும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY