தொழில்நுட்ப பயிற்சி நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

0
127

கல்வியின் ஊடாக சமூகத்தை வலுவூட்டல் நோக்காகக் கொண்டு நாடலவிய ரீதியில் செயற்பட்டு வருகின்ற Insight Institute of Management and Technology என்ற இலாப நோக்கமற்ற நிறுவணமானது கொழும்பு வாழ் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு வளாகம் தனது ஒருவருட பூர்த்தியினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

பாடசாலை கல்வி முறைமையின் ஊடாக தனது ஆற்றல்களை வெளிப்படுத்த தவறிய மாணவர்களும் தொழிற் கல்வியை திறம்படக் கற்று வாழ்க்கையில் முன்னேறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

இத் தொழில்நுட்ப கல்விக்கூடம் இதுவரைக்கும் 70க்கு மேற்பட்ட மாணவர்கள் தனது கல்லூரி கற்கைகளை முடித்து விட்டு தொழிற் பயிற்சிக்காக இவ்வளாகத்தில் கற்று வெளியேறியுள்ளனர்.

வறிய மாணவர்களுக்கும் இக்கல்லூரியில் கற்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் பொருட்டு புலமைப்பரிசில் வசதிகளும் இங்கு வழங்கப்படுகின்றன.

இக்கல்லூரியில் மொட்டார் வாகனத் தொழிநுட்பவியல் (Automobile Mechanics), கட்டிட நிர்மான தொழிநுட்பவியல் (Auto CAD & CS) மற்றும் குளிரூட்டலும் வளிச் சீராக்கலும் (A/C & Refrigeration) போன்ற கற்கை நெறிகள் கற்பிக்கப்படுவதோடு கற்கைநெறிகளை பூரணப்படுத்திய மாணவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகின்றது.

இம்மாதம் 10,11 ஆம் திகதிகளில் இலக்கம் 312, அவிசாவளைரோட்,வெல்லம்பிட்டிய எனும் முகவரியில் மாணவர்களை உள்வாங்குவதற்கான நேர்முகப்பரீட்சை இடம் பெறும்.

மேலதிக விபரங்களுக்கு 0776226769 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

LEAVE A REPLY