இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்து : இருவர் காயம்

0
137

காலி கரந்தெனிய கிரிபெத்தவில் நேற்று இரவு இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

உந்துருளியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதாலேயே இந்த விபத்து ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் படுகாயமடைந்த இருவர் கராப்பிட்டிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரந்தெனியப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY