புலிகள் பயன்படுத்திய பதுங்கு குழியொன்று முல்லைத்தீவில் கண்டுபிடிப்பு

0
335

இறுதி யுத்தத்தின் போது எல்.ரி.ரி.ஈ. கட்டளையிடும் தளபதியொருவர் பயன்படுத்தியதாக கூறப்படும் பதுங்கு குழியொன்று முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சார்ல்ஸ் அண்டனி விசேட படையணியின் தலைவர் ஒருவர் பயன்படுத்தியதாக கூறப்படும் பதுங்கு குழியே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதுக்குடியிருப்பு பாதையிலிருந்து தெற்குப் பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இந்த பதுங்கு குழி அப்பிரதேசத்தைச் சேர்ந்த விரகு வெட்டச் சென்ற சிலரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முள்ளியாவெளி மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளிடம் வினவியபோது, இது தொடர்பில் தங்களுக்கு இதுவரை தகவல்கள் கிடைக்கப் பெறவில்லையெனவும் கூறியுள்ளனர்

thamim thamim2

LEAVE A REPLY