கைக்குண்டுடன் இராணுவ அதிகாரி ஒருவர் கைது

0
105

கைக்குண்டை வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியொருவர் பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரிடமிருந்து பொயின்ட் 22 ரக இரவைகள் 8109 மில்லி மீற்றர் இரவைகள் 330 ரீ 56 ரக இரவைகள் மற்றும் துப்பாக்கி மெகசீன் ஒன்றும் மீட்கப்பட்டது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொடகம மீகொடப் பகுதியைச் சேர்ந்த 42 வயதான சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்று ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் மீகொடப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY