ஆங்கில பாடத்தில் 51 வீதமானவர்களே சித்தி

0
109

2017 ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஆங்கில பாடத்தில் 51 வீதமானவர்களே சித்தியை பெற்றுள்ளனர்.

பரீட்சை தொடர்பான மதிப்பீடுகளை மேற்கோள்காட்டி அரசாங்க இணையத்தளம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

2017 கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தர பரீட்சை சித்திகளின்படி 2 லட்சத்து 96 ஆயிரத்து 157 மாணவர்கள் ஆங்கிலப் பரீட்சைக்கு தோற்றினர்.

அவர்களுள், 31 ஆயிரத்து 619 பேர், ஏ சித்தியையும், 39 ஆயிரத்து 717 பேர், பி சித்தியையும், ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 393 பேர், எஸ் சித்தியையும் பெற்றுள்ளனர்.

ஏனைய முக்கிய பாடங்களில் பெற்ற சித்திகளுடன் ஒப்பிடுகையில் இது குறைந்த மட்ட சித்தியாகும்.

எனினும், கடந்த 2016 ஆம் ஆண்டு 47 சதவீதமானோரே ஆங்கில பாடத்தில் சித்திபெற்றிருந்தனர்.

இதற்கமைய, 2016 ஆம் ஆண்டு ஆங்கில பாட சித்தி மட்டத்துடன், ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சித்தியடைந்தோர் வீதம் அதிகமாகும் என மதிப்பீடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞான பாடத்தில் 73.46 வீதமும் கணித பாடத்தில் 67.24 வீதம் சித்தியடைந்துள்ளதாகவும், இவை கடந்த ஆண்டில் முறையே 66.33 மற்றும் 62.81 ஆகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY