முசலி நீர்ப்பாசனப் பிரச்சினை என்று தீருமோ?

0
125

(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)

முசலிப்பிரதேசம் மன்னார் மாவட்டத்தின் அருவியாற்றுக்குத் தென்புறமாக அமைந்துள்ள ஒரு தொன்மையான பிரதேசமாகும். இங்குள்ள மக்களின் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், வியாபாரம், மீன்பிடி, காட்டுத்தொழில் போன்றவை அமைந்துள்ளன.

இங்கு இரு ஆறுகள் உள்ளன. 1.அருவியாறு(மல்வத்து ஓயா, காதம்ப நதி), 2.கல்லாறு பாரிய குளங்களான அகத்தி கட்டுக்கரைக் குளம், வியாயடிக்குளம்(பெரிய கட்டுக்குளம்.) அதன்கீழான பல சிறிய குளங்களும் உள்ளன.

கடந்த ஓரிரண்டு வருடங்களாக வருடமழைவீழ்ச்சி குறைவடைந்தமையால் முசலிப்பிரதேசத்தில் நெற்செய்கை வரட்சியால் அழிவடைந்ததைக் காண முடிந்தது. இதனால் முசலிப்பிரதேச விவசாயிகள் பாரிய நட்டத்தை எதிர் கொண்டுள்ளனர்.

இதேவேளை கிடைக்கின்ற மழை நீரில் ஆயிரக்கணக்கான கணமீட்டர் நீர் வீணாக கடலுடன் சேர்வதைக் காணமுடிகிறது. இப்பணியை அருவியாறும், கல்லாறுமே செய்கின்றன. ‘ஒரு துளி நீரும் வீணாகக் கடலில் வீணாகக் கலக்கப்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன்’ என்ற பராக்கிரமபாகு மன்னனின் நீர்முகாமைக் கொள்கை இங்கு நோக்கத்தக்கது.

‘முசலியில் நீர் வீணே கடலில் கலக்க விடுவது நீர்முகாமைக்கு எதிரானதே’

வருடாவருடம் முசலி எதிர்கொள்ளும் நீர்ப்பாசனப் பிரச்சினையைத் தீர்க்க பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஓரளவு கட்டுப்படுத்தலாம்.

1.அருவியாற்று நீரை அகத்திக் கட்டுக்கரைக்கும், முருங்கன் கட்டுக்கரைக்குளத்திற்கும் சமமாகப் பிரித்து வழங்கல்
2.கல்லாற்றை மறித்து வியாயடிக்குளத்திற்கு நீர் வழங்கல்
3.விவசாயிகளுக்கு நீர் முகாமை தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடாத்துதல்.
4.தாமரை,அல்லி,போன்ற நீர்த்தாவரங்களை குளங்களில் வளர்ப்பதன்முலம் நீர் ஆவியாதலைத் தடுக்கலாம்.
5.குளநீர் வயல்களுக்குப் பாய்ச்சப்படும்போது பாரிய அளவில் நிர் விரயமாகிறது.இதுதொடர்பாக சரியான பொறிமுறையும் கண்காணிப்பும் தேவை
6.குழாய்க்கிணறுகள் வாய்க்காலுடன் அண்மித்ததாக அமைக்கப்பட்டு பாவிக்கக் கூடிய தயார் நிலையில் .இருக்க வேண்டும்.
7.வீணாகக் கடலில் சேரவிடாது மழைநீரை சேமிக்க நடவடவடிக்கை எடுத்தல்

அகத்தி நீர்ப்பாசனத்திட்டத்தையும், வியாயடி நீர்ப்பாசனத்திட்டத்தையும் புனரமைத்து சிறந்த ஒரு நிர்ப்பாசன வசதியை அமைச்சர் றிசாத் பதியுதின் அவர்கள் நீர்ப்பாசனத்துறை அமைச்சருடன தொடர்பு கொண்டு செய்து தரவேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

LEAVE A REPLY