ஜீஎஸ்பி பிளஸ் தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்குவதற்கு ஐரோப்பிய பாராளுமன்றம் அங்கீகாரம்

0
63

இலங்கை ஜீஎஸ்பி பிளஸ் நிவாரணத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அங்கீகாரத்தை வழங்குவதாக சர்வதேச வர்த்தகத்திற்கான ஐரோப்பிய பாராளுமன்றக் குழு அறிவித்துள்ளது.

இந்த நிவாரணத்தை வழங்குவது தொடர்பில் இலங்கையுடன் நட்புறவுடன் செயற்படுவதாக அதன் தலைவர் ஜான் சஜராதில் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்பி நிவாரணம் இலங்கைக்கு வழங்கப்பட்டு ஒரு வருட காலம் நிறைவடைந்துள்ளது. இந்த நிவாரணத்தை வழங்குவதற்கு நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை.

இருப்பினும் இந்நாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பயங்கரவாதத்தைத் தவிர்ப்பதற்குமாக துரிதமாக பாராளுமன்றத்தில் புதிய சட்டம் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக இந்தச் சங்கத்தின் தெற்காசியப் பிராந்திய வதிவிடப் பிரதிநிதி சஜாற் கரீம் தெரிவித்துள்ளார்.

இவர்கள் கடந்த நாலாம் திகதி முதல் இலங்கைக்கான விஜயத்தில் ஈடுபட்டிருந்தனர். ஜீஎஸ்பி பிளஸ் நிவாரணத்தின் மூலம் பெறப்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் இவர்கள் கவனம் செலுத்தினர். இந்தக் குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் அமைச்சர்கள் பலரையும் சந்தித்தனர்.

(news.lk)

LEAVE A REPLY