கழுத்தை வெட்டப் போவதாக அச்சுறுத்தியதாக மட்டு மா.சபையின் பெண் உறுப்பினர் ஒருவர் சபையில் தெரிவிப்பு

0
88

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு மாநகர சபையின் பெண் உறுப்பினர் ஒருவரை சபை அமர்வின் போது கழுத்தை வெட்டப் போவதாக அச்சுறுத்தியதாக பெண் உறுப்பினர் சபையில் பகிரங்கமாக தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு மட்டக்களப்பு மாநகர சபையின் சபா மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்த போது பிரதி மேயரை தெரிவு செய்யும் நடவடிக்கை இடம் பெற்றுக் கொண்டிருந்தன.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பெண் உறுப்பினர் திருமதி சசிகலா விஜதேவா எழும்பி தனக்கு இந்த சபையின் பார்வையாளர் அரங்கில் இருக்கின்ற ஒரு சிலர் தனது கழுத்தை வெட்டப்போவதாக அச்சுறுத்துகின்றனர் என குறிப்பிட்டதுடன் இதை மேயர் உட்பட சபையிலிருந்த அனைவரிடமும் உரத்த குரலில் தெரிவித்தார்.

இதன் போது சபை அமர்வுக்கு மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய மேயர் தியாகராஜா சரவணபவன் தலைமை தாங்கிக் கொண்டிருந்தார்.

இதன் போது சபையில் சப்தம் ஏற்பட்டு பின்னர் அது சுமூகமாக மாறியது.

மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது அமர்வவை பார்வையிடுவதற்காக சபையின் பார்வையாளர் மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், எஸ்.வியாழேந்திரன், தமிழரசுக் கட்சியின் செயலாளர் முன்னாள் மாகாண அமைச்சர் கே.துரைராஜசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) மற்றும் தமிழ் மக்கள் விடதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பிரசாந்தன் உட்பட கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் பார்வைளார்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

38 உறுப்பினர்களைக் கொண்ட மட்டக்களப்பு மாநகர சபையில் 8 பெண் உறுப்பினர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC07661

LEAVE A REPLY