பிரதியமைச்சர் ஹரீஸ் மீது குற்றம் சுமத்தி நற்பிட்டிமுனையில் போராட்டம்

0
98

(பாறுக் ஷிஹான்)

கல்முனை மாநகர சபை பிரதி மேயரை தங்களுக்கு கிடைக்க விடாமல் தடுத்ததாக பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் மீது குற்றம் சுமத்தி நற்பிட்டிமுனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இன்று(6) ஜும்மா தொழுகைக்கு பின்னர் பள்ளிவாசலின் முன்னால் ஒன்று கூடிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் பல்வேறு கோசங்களை எழுப்பி ஊர்வலமாக நற்பிட்டிமுனை பிரதான வீதியை சென்றடைந்தனர்.

இதே வேளை நற்பிட்டிமுனையில் ஒட்டப்பட்டிருந்த துண்டுப்பிரசுரங்கள் பல இனந்தெரியாத நபர்களினால் கிழித்தெறியப்பட்டிருந்தன.

ஏனெனில் ஒட்டுமொத்த நற்பிட்டிமுனை மக்களும் குறித்த போராட்டத்திற்கு பங்களிப்பு வழங்காமையும் நற்பிட்டிமுனை மக்கள் என குறித்த கட்சி ஆதரவாளர்கள் விழித்திருந்ததையும் கண்டித்து துண்டுப்பிரசுரங்கள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

01 02 03

LEAVE A REPLY