போலி வெடிகுண்டை உடலில் கட்டி வங்கியை கொள்ளையடிக்க வந்து அலறவைத்த நபர்

0
427

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள சாந்த்புரின் எச்.டி.எப்.சி வங்கி உள்ளது. இந்நிலையில், இன்று இடுப்பு பெல்டில் போலியான வெடிகுண்டுகளை கட்டி வங்கிக்குள் நுழைந்த நபர் வங்கியை கொள்ளையடிக்க போவதாக மிரட்டியுள்ளார்.

இதனை அடுத்து, அங்குள்ள வங்கி பணியாளர்கள் அவரை லாவகமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பண நெருக்கடி காரணமாக என்ன செய்வதென்று தெரியாமல் இப்படி செய்து விட்டதாக போலீஸ் விசாரணையில் அந்த நபர் தெரிவித்துள்ளார். பிடிபட்ட நபர் மனநிலை சரியில்லாதவர் என போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY