சவுதியில் 18 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள சினிமா கொட்டகை

0
197

கடந்த 35 வருடங்களின் பின்னர் சவுதியில் முதலாவது சினிமா படக் கொட்டகை எதிர்வரும் 18 ஆம் திகதி சவுதியின் ரியாத் நகரில் திறந்து வைக்கப்படவுள்ளதாக அந்நாட்டு பத்திரிகையொன்று அறிவித்துள்ளது.

சவுதி அரச அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனம் என்பவற்றுக்கிடையில் ஏற்படுத்தப்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்பாடுகளின் அடிப்படையில் இந்த திரைப்படக் கொட்டகை திறக்கப்படவுள்ளது. அடுத்து வரும் ஐந்து வருட காலப் பகுதியில் சவுதியில் 40 சினிமா கொட்டகைகளை அமைப்பதற்கு ஏ.எம்.சி. ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கும் சவுதி அரச அதிகாரிகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சவுதி அரேபியாவில் காணப்பட்ட கடுமையான சட்டம் தற்பொழுது தளர்த்தப்பட்டுள்ளது. முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் மற்றும் அவரது தந்தையும் சவுதி மன்னனுமான சல்மான் ஆகியோரின் புதிய சீர்திருத்தங்களின் அடியாக இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சவுதி அரேபியாவில் 70 களுக்கு முன்னர் சினிமா கொட்டகைகள் காணப்பட்டன. ஷரீஆ தீர்ப்புக்களின் அடிப்படையில் கடந்த 1970 ஆம் ஆண்டுகளில் சவுதி உலமாக்களினால் சினிமாக் கொட்டகைகள் தடை செய்யப்பட்டன. இந்த தீர்ப்பின்படி இதுவரையில் சவுதியில் எந்தவித சினிமா கொட்டகைகளும் காணப்படவில்லையெனவும் அந்நாட்டுப் பத்திரிகையொன்று அறிவித்துள்ளது

LEAVE A REPLY