பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளன வருடாந்தப் பொதுக் கூட்டம்

0
207

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளன வருடாந்தப் பொதுக் கூட்டம் சனிக்கிழமை 07.04.2018 காலை 9.45 மணிக்கு காத்தான்குடி அல்மனார் அர்ராஷித் மண்டபத்தில் இடம்பெற ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக அதன் செயலாளரும் ஊடகவியலாளருமான எம்.எம்.எம். முஸ்தபா (மௌலவி) அறிவித்துள்ளார்.

மேற்படி சம்மேளனத் தலைவர் ஏ.எல். ஆதம்லெப்பை (மௌலவி) தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் ‪ காத்தான்குடி பிரதேச பள்ளிவாயல்களில் கடமையாற்றும் கதீப்மார் இமாம்கள் உட்பட மார்க்க அறிஞர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

DSC04149

மேலும், கதீப்மார் மற்றும் இமாம்களின் பணிகளும் அவர்களின் நடைமுறை வழிகாட்டல்களும் எனும் தொனிப் பொருளில் அஷ்ஷெய்ஹ் ஏ.எம். அக்ரம் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது.

அத்துடன், நிருவாக மறுசீரமைப்பும் இன்னபிற நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

LEAVE A REPLY