கரடி தாக்குதலினால் கந்தளாய்-தம்பலகாமம், சிறாஜ் நகரைச்சேர்ந்த இருவர் காயம்

0
175

(அப்துல் சலாம் யாசீம்)

கந்தளாய் 97ம் கட்டை பழக்கடைக்கருகில் கரடி தாக்குதலினால் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் இன்று (05) காலை கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் தம்பலகாமம், சிறாஜ் நகரைச்சேர்ந்த எம்.நஸார்தீன் (42வயது) மற்றும் எம்.நபீல் (24வயது) எனவும் தெரிய வருகின்றது.

கடந்த சில தினங்களாக கந்தளாய் பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லையினால் பாதிக்கப்பட்ட மக்கள், வீடுகளில் வளர்த்து வந்த நாய்க்குட்டிகள் காணாமல் போய் வந்திருந்த நிலையில் அந்நாய் குட்டிகளை புலிகள் கொண்டு செல்வதாக கண்டறியப்பட்டது.

இதேவேளை இன்றைய தினம் கந்தளாய் பிரதான வீதி 97ம் கட்டைப்பகுதிக்குள் கரடித்தாக்குதலும் இடம் பெற்றுள்ளது.

காட்டு ராஜா என்றழைக்கப்படுகின்ற யானை, புலி மற்றும் கரடி போன்றவற்றின் வருகையினால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

வனவிலங்குகளின் தொல்லைகள் குறித்து வனவிலங்கு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

LEAVE A REPLY