ஆயித்தியமலை-நெல்லூர் கிராமத்தில் தரம் 9 மாணவி சடலமாக மீட்பு

0
131

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஆயித்தியமலை, பொலிஸ் பிரிவிலுள்ள நெல்லூர் கிராம வீடொன்றிலிருந்து சிறுமியொருவரின் சடலம் இன்று (05) வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.

நெல்லூர் பாடசாலை வீதியைச் சேர்ந்த மகிழவெட்டுவான் வித்தியாலயத்தில் 09ஆம் தரத்தில் கற்கும் சிவலிங்கம் திஷாந்தினி (வயது 16) என்ற பாடசாலை மாணவியின் சடலமே மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

!

LEAVE A REPLY