அல் மஜ்மா கிராமத்தின் மாதர் அபிவிருத்தி சங்க அங்குரார்ப்பணமும் பொதுக் கூட்டமும்

0
38

(வாழைச்சேனை நிருபர்)

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அல் மஜ்மா கிராமத்தின் மாதர் அபிவிருத்தி சங்க அங்குரார்ப்பணமும் பொதுக் கூட்டமும் நேற்று முன்தினம் (03) மாலை இடம் பெற்றது.

அல் மஜ்மா கிராமத்தின்; கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.இர்பான் தலைமையில் மஜ்மா மேற்கு ஜும்மா பள்ளிவாயல் வளாகத்ததில் இடம்பெற்ற மாதர் சங்க அங்குரார்பண கூட்டத்திற்கு கிராம சேவை அதிகாரி ஏ.எல்.எம்.பஸ்மின், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.துஸ்யந்தன், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எல்.சமீம் மற்றும் உருப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது தலைவியாக ஐ.சம்ரோஸ், செயலாளர் என்.ஏ.பேகம், பொருளாலர் எஸ்.ஐ.நபீரா, உப தலைவர் என்.பாத்தும்மா ,உப செயலாளர் ஏ.எல்.ஹூசைனியா, உறுப்பினர்களாக எம்.ஐ.றகுமதும்மா, எம்.என்.சஹானா, எச்.எல்.மக்கியா, எ.எம்.ரூபியா, யூ.எல்.றஸ்லியா, யூ.எல்.ஹஜாரா வீவீ, எ.பி.ஹதீஜா உம்மா ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் சங்கத்தின் கணக்காய்வாளாராக ஆபூபக்கர் மாஜிதாவும் சங்கத்தின் ஆலோசகராக கிராம அபிவருத்தி உத்தியோகத்தரும் தெரிவு செய்ரப்பட்டனர்.

03

LEAVE A REPLY