(வீடியோ).,ஓட்டமாவடி பிரதேச சபையின் முதல் அமைவிற்காக செயலாளர் ஹமீம் தலைமையில் மேற்கொள்ளப்படும் தடல்புடல் ஏற்பாடுகள்..

0
348

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

கடந்த 2018.02.10ம் திகதி இடம் பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் மூலம் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதி நிதிகளில் இருந்து தவிசாளர் மற்றும் உபதவிசாளர்களை தெரிவு செய்யும் கூட்டம் 2018.04.06ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற உள்ளமையினை ஓட்டு மொத்த ஓட்டமாவடி மக்களும் எதிர் பார்த்திருக்கின்ற முக்கிய நிகழ்வாகும்.

அந்த வகையில் ஏற்கனவே ஒன்பது உறுப்பினர்களை கொண்டிருந்த குறித்த பிரதேச சபையானது இம்முறை இடம் பெற்ற புதிய தேர்தலின் பிரகாரம் பதினெட்டு உறுப்பினர்களை உள்ளடகியதாக அமையவுள்ளமை முக்கிய அம்சமாகும். அதற்காக சபையின் செயலாளராக கடமை புரிகின்ற எம்.எச்.எம்.ஹமீமின் ஏற்பாட்டில் நவீன மயப்படுத்தப்பட்ட உறுப்பினர்களுக்கான ஒன்று கூடல் மண்பம், தவிசாளர், உபதவிசாளருக்கான பிரத்தியேக காரியாலயங்கள் மற்றும் அதனுடனான புதிய நிருவாக உத்தியோகத்தர்களுக்கான காரியாலயங்கள் என்பன தடபுடலாக இடம் பெற்று வருவதுடன் பிரதேச சபையும் அழகுபடுத்தப்பட்டு வருகின்றமையினை காணக்கூடியதாக இருக்கின்றது.

எது எவ்வாறாயினும் ஓட்டமாவடி பிரதேச சபையில் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியடைந்திருந்தாலும் தற்பொழுது அவர்களுக்கிடையில் நடக்கும் உள்வீட்டு பிரச்சனைகளுக்கு மத்தியில் தவிசாளர் மற்றும் உபதவிசாளர் யார் என்பதை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் வரைக்கும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செயலாளர் ஹமீமின் தடபுடல் ஏற்பாடுகளின் காணொளி எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

வீடியோ –

LEAVE A REPLY