அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவராக அலி சாஹிர் மௌலானா நியமனம்

0
186

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அலிசாஹிர் மௌலானாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக, ஏறாவூர நகர சபையின் உறுப்பினர் நழீம் முஹம்மது சாலி நழீம், இன்று (04) தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் அமீர் அலி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஆகியோர் செயற்பட்டு வரும் நிலையிலேயே, குறித்த இணைத்தலைமை பதவிக்கு அலிசாஹிர் மெளலானாவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY